Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜக்கி வாசுதேவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி.. விரைவில் குணமடைய வாழ்த்து..!

ஜக்கி வாசுதேவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி.. விரைவில் குணமடைய வாழ்த்து..!

Siva

, வியாழன், 21 மார்ச் 2024 (07:31 IST)
ஜக்கி வாசுதேவ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 கடந்த சில நாட்களுக்கு முன் சத்குரு ஜக்கி வாசுதேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் இதனை அடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அறுவை சிகிச்சைக்கு பின் ஜக்கி வாசுதேவ் வெளியிட்ட வீடியோவில் தான் நலமாக இருப்பதாகவும் விரைவில் பூரண குணமடைந்து விடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜக்கி வாசுதேவ் பூரண நலத்துடன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் களத்தில் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜக்கி வாசுதேவ் இடம் நலம் விசாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஏற்கனவே பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததாக கூறிய நிலையில் தற்போது பிரதமர் மோடியும்  தனது எக்ஸ் தளத்தில் அவரது உடல்நிலை குறித்து பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்கதையாகும் தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையால் 32 பேர் கைது..!