Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடகாவில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது : மே 12ல் வாக்குப்பதிவு

கர்நாடகாவில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது : மே 12ல் வாக்குப்பதிவு
, வியாழன், 10 மே 2018 (11:11 IST)
224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

 
இதைத் தொடர்ந்து அங்கு பிரச்சாரம் களை கட்ட தொடங்கியது. பாஜகவிற்கு ஆதரவாக பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அங்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அதேபோல், காங்கிரஸுக்கு ஆதரவாக சித்தராமய்யா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
 
செல்லும் இடமெங்கும் காங்கிரஸை கடுமையாக தாக்கி மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அதற்கு சித்தராமய்யா பதிலடி கொடுத்தார்.  அதேபோல், கர்நாடகாவின் அடிப்படை பிரச்சனைகளை மோடி நிராகரிப்பதாக ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார்.
 
இந்நிலையில், இன்றோடு கர்நாடகாவில் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. எனவே இறுதிக்கட்ட பிரச்சாரத்தை காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பு தீவிரப்படுத்தியுள்ளது.
 
வருகிற 12ம் தேதி வாக்குப்பதிவு  நடைபெற்று, 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி அவசர ஆலோசனை