Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு கல் குவாரியையே கருப்பையில் வைத்திருந்த பெண்.. 8125 கல் சர்ஜரி மூலம் அகற்றம்..!

Advertiesment
கருப்பைக்கல் அறுவைசிகிச்சை

Siva

, வெள்ளி, 23 மே 2025 (07:40 IST)
குருகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், 70 வயதுடைய ஒரு மூதாட்டியின் வயிற்றில் இருந்து 8,125 கருப்பைக்கல்  அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
70 வயது மூதாட்டி கடந்த 4 ஆண்டுகளாக வயிற்று வலி, தோள்பட்டை மற்றும்  வலி, உடல் சோர்வு, பசி இல்லாமை, காய்ச்சல் ஆகியவை இருந்தும் மருத்துவமனைக்கு வர மறுத்துள்ளார். வலி அதிகரித்ததால் குடும்பத்தினர் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
 
அல்ட்ராசவுண்ட் சோதனையில், கருப்பைக்குடல் முழுவதும் கற்களால் நிரம்பி, இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள், “minimally invasive laparoscopic surgery” எனப்படும் அறுவைசிகிச்சை உடனே செய்ய முடிவு செய்தனர்.   
 
1 மணி நேரம் நடந்த அறுவைசிகிச்சையில், 8,125 கற்களை வெளியே எடுத்ததாகவும், இந்த கற்களை எண்ண மட்டும் 5 மணி நேரம் ஆனதாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர் அமித் ஜாவேத் தெரிவித்தார். மேலும் 2 நாளில் நோயாளி முழுமையாக நலமுடன் வெளியேற்றப்பட்டார்.
 
2015-ல் கொல்கத்தாவில் 11,950 கற்கள் மற்றும் 2016-ல் ஜெய்ப்பூரில் 11,816 கற்கள் அகற்றப்பட்டிருந்த நிலையில் இந்த மூதாட்டி 3வது இடத்தை பெறுகிறார்.
 
அதிக கொழுப்பு, உயர் கொழுப்பு உணவுகள்,  போன்றவை இத்தகைய கற்கள் உருவாக காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!