Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருந்து கேட்டு கடிதம் அனுப்பிய நாடுகள்! – இக்கட்டான சூழலில் இந்தியா!

Advertiesment
National
, புதன், 8 ஏப்ரல் 2020 (13:06 IST)
அமெரிக்காவுக்கு ஹைராக்ஸிக்ளோரோகுயின் மருந்தை இந்தியா வழங்கியதை தொடர்ந்து பிரேசிலும் மருந்து கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதில் ஹைராக்ஸிக்ளோரோகுயின் மருந்திற்கு முக்கிய பங்கு இருப்பதை மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்ட நிலையில், அதன் வெளிநாட்டு ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது இந்தியா. ஆனால் ஏற்றுமதி நிறுத்துவதற்கு முன்பே அமெரிக்க அதிபர் இந்தியவிடமிருந்து அந்த மருந்தை கேட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று ட்ரம்ப்பின் அதிருப்தி பேச்சை தொடர்ந்து அமெரிக்காவிற்கு மருந்து அனுப்ப அனுமதித்தது இந்தியா.

இந்நிலையில் பிரேசில் அதிபர் போல்சனேரோ பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ராமாயணத்தை மேற்கோள் காட்டியுள்ள அவர் ”அனுமன் சிரஞ்சீவி மலையையே கொண்டு வந்து இலட்சுமனனை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்ஸிக்ளோரோகுயினை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் சில இந்திய நட்புறவு நாடுகளும் ஹைராக்ஸிக்ளோரோகுயினுக்காக தொடர்ந்து இந்தியாவிடம் வலியுறுத்தி வருகின்றன. இத்தனை நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்ய இந்தியாவிடம் இருப்பு உள்ளதா என்பது குறித்தே தெரியாத நிலையில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பேசிக்கொள்ளப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வதந்தியை நம்பி ஊமத்தங்காய் விதை சாப்பிட்ட 11 பேர் கவலைக்கிடம்