Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாராளுமன்றம்-சட்டமன்றம், ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லை: தேர்தல் ஆணையர்

பாராளுமன்றம்-சட்டமன்றம், ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லை: தேர்தல் ஆணையர்
, புதன், 4 ஜூலை 2018 (21:02 IST)
மத்திய பாஜகவின் அரசின் திட்டங்களில் ஒன்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான். இதனால் பெருமளவு செலவு குறையும் என்பது மத்திய அரசின் கருத்து. ஆனால் இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் இது சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியுள்ளது.
 
பிரதமர் மோடியின் ஆலோசனையான பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்பதற்கு சட்ட ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல்களில் இரண்டு கட்டமாக இத்திட்டத்தை அமல்படுத்த சட்ட ஆணையம் சிபாரிசி செய்தது. இதுகுறித்து அனைத்து கட்சி தலைவர்களிடமும் விரைவில் மத்திய அரசு கருத்து கேட்க திட்டமிட்டுள்ளது
 
webdunia
இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது,  'நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்டத்தில் இடமில்லை என்றும், சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே இது சாத்தியம் என்றும் கூறினார். மேலும் அரசியலமைப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின் படி தேர்தல் ஆணையம் செயல்படும் என்றும் எனவே, தற்போதைய நிலையில் தேர்தலை தொடர்ந்து நடத்துவோம் என்றும் தேர்தல் ஆணையர் கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிமெயில் மின்னஞ்சல்களை படிக்கும் ரகசிய கண்கள் யாருடையது?