Publish Date: Tue, 13 Aug 2019 (18:42 IST)
Updated Date: Tue, 13 Aug 2019 (18:47 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் சாலைகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இன்று 4.20 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ”லே” பகுதிக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.