Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான், ஆப்கானிஸ்தானை அடுத்து இந்தியாவில் நில அதிர்வு: ரிக்டரில் 3.9 ஆக பதிவு

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (07:22 IST)
ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இந்த நில அதிர்வு ரிக்டரில் 3.9 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு 12.38 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது என்றும், பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவியியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் வந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலும் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் ஜப்பான், ஆப்கானிஸ்தானை அடுத்து இன்று ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ALSO READ: நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. பணியிட மாற்றம் செய்ய டி.ஜி.பி. சுற்றறிக்கை..!
 
 ஏற்கனவே புவியியல் ஆய்வாளர்கள் ஜப்பான்,  ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளின் கீழ் உள்ள புவி தட்டுகள் ஒரே அடுக்கில் இருப்பதாகவும் ஒரு இடத்தில் நில அதிர்வு வந்தால் அடுத்தடுத்து மற்ற இடங்களிலும் வரும் என்றும் கூறியிருந்தனர். அது போலவே ஜப்பான் ஆப்கானிஸ்தானை அடுத்து இந்தியாவிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments