Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜம்மு-காஷ்மீரில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

Advertiesment
ஜம்மு-காஷ்மீரில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
, திங்கள், 11 டிசம்பர் 2017 (10:14 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.
இந்திய-சீன எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கமானது பூமிக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கட்டிடம் குலுங்கியதால் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் அங்கு ஏற்பட்டுள்ள  பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீனவர்களை மீட்க வலியுறுத்தி நாகை பெண்கள் கடலில் இறங்கியதால் பரபரப்பு