கர்நாடகாவில், இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை செய்ய மாநில அரசு தடை விதித்துள்ளது.
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் முக்கிய காரணியாக இருப்பது சிகரெட். வழக்கமான சிகரெட்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் தற்போது இளைஞர்கள் இடையே வேகமாக பரவி வரும் இந்த எலக்ட்ரானிக் சிகரெட்கள் தேவைப்படும்போது, பட்டனை தட்டிவிட்டு புகைக்கலாம்.
இந்த இ சிகரெட் அடையாளம் காண முடியாத பல புதிய வகை நோய்களை ஏற்படுத்தக்கூடும் என, சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து கர்நாடகா மாநிலத்தில் இ சிகரெட் விற்பனைக்கு செய்வதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இ சிரெட்டுகளுக்குத் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.