Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமான பணிப்பெண்ணுடன் கண்டதும் காதல்: மத்திய மந்திரியின் 2வது திருமணம்

Advertiesment
விமான பணிப்பெண்ணுடன் கண்டதும் காதல்: மத்திய மந்திரியின் 2வது திருமணம்
, வெள்ளி, 17 ஜூன் 2016 (06:08 IST)
மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ விமான பணிப்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார்.


 

 
பாடகராக இருந்து அரசியலுக்கு வந்த பாபுல் சுப்ரியோ, கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து பாஜக மத்திய மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அவர் ஏற்கனவே ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து, 2006-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார்.
 
இதையடுத்து, 2014-ம் ஆண்டு, மும்பை-கொல்கத்தா விமான பயணத்தின்போது, அதில் பணியில் இருந்த ரச்னா சர்மா என்ற விமான பணிப்பெண்ணை முதல் முறையாக சந்தித்தார். கண்டதும் காதல் கொண்டார்.
 
2 வருடங்களாக இருவரும் காதலித்து வருகிறார்கள். சமீபத்தில், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் ஆகஸ்டு 9-ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. மணப்பெண் பஞ்சாபி. பாபுல் சுப்ரியோ வங்காளி. வங்காள பாரம்பரிய முறைப்படி எளிமையாக திருமணம் நடைபெறுகிறது.
 
இது, பாபுல் சுப்ரியோவுக்கு 2-வது திருமணம் ஆகும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் 12வது சர்வதேச இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள் கண்காட்சி