டெல்லியில் விடுதியில் தங்கிப் படிக்கும் 18 வயது எம்.பி.பி.எஸ். மாணவி ஒருவரை, அவரது ம் நண்பர்களும் சுமார் ஒரு மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டியதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு டெல்லியின் ஆதர்ஷ் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் விருந்தின்போது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி ஒரு மாதமாக மிரட்டி வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 20 வயதான குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.