Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு விரைவில் எண்ட் கார்ட்??

Webdunia
புதன், 19 மே 2021 (13:07 IST)
கொரோனாவிலிருந்து ஒருவரை குணப்படுத்தும் விகிதம் ரெம்டெசிவிர் மருந்துகளில் குறைவாக இருப்பதால், விரைவில் இதற்கு தரப்படும் முன்னுரிமை குறையும் என தகவல். 

 
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தீவிரமடையத் தொடங்கிய காலத்தில் பிளாஸ்மா சிகிச்சை முறை அதிகளவில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இப்போது கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கு பிளாஸ்மா சிகிச்சை பலன் அளிக்கவில்லை.  
 
இறப்பு விகிதத்தையும் பிளாஸ்மா சிகிச்சை முறை குறைக்கவில்லை என்பதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறையை கைவிடுவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தனது இறுதி முடிவை தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது ரெம்டெசிவிர் மருந்துகள் கொரோனாவுக்கான சிகிச்சைப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என டெல்லி மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
 
ஆம், கொரோனாவிலிருந்து ஒருவரை குணப்படுத்தும் விகிதம் ரெம்டெசிவிர் மருந்துகளில் குறைவாக இருப்பதால், விரைவில் இதற்கு தரப்படும் முன்னுரிமை குறையும் என்றும் இதன் விநியோகம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் டெல்லியை சேர்ந்த கங்காராம் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ராணா கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments