Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’என்னை சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்’’ - பிரதமர் மோடி ’டுவீட்’’

’’என்னை  சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்’’ - பிரதமர் மோடி  ’டுவீட்’’
, புதன், 8 ஏப்ரல் 2020 (18:00 IST)
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவை தடுக்க அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்க்காக,  இரவு 9மணிக்கு, மக்கள் தமது வீடுகளில்  மெழுகுவர்த்தி மற்றும் அகல் விளக்கேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு முன்னதாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்துவரும் செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் பொருட்டு, வீட்டில் இருந்து கைதட்டுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை கவுரவிக்கும் விதத்தில் அனைவரும் 5 நிமிடம் எழுந்து நில்லுங்கள் என ஒரு தகவல் பரவியது.

இதற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

அதில், என்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம். என்னை கவுரவிக்க விரும்பினால், ஒரு ஏழை எளிய குடும்பத்திற்கு உதவும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஏழை, எளிய குடும்பத்திற்கு உதவுவதை விட எனக்கு சிறந்த மரியாதையை அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவுக்கு சப்போர்ட்; WHO-க்கே வார்னிங் கொடுத்த ட்ரம்ப்!!