Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (12:37 IST)
மதுரையில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்துள்ள தமிழிசை சவுந்திரராஜன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்தார்.
 
செய்தியாளர்களிடம் பேசும் போது:   G-ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்றுவரும் வருமானவரித் துறை சோதனை குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. நான் பாஜக தலைவராக இருந்தபோது அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறேன்.
 
அனைவருக்கும் கருத்துக் கூற உரிமையுண்டு அதனடிப்படையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரது கருத்தை தெரிவித்து இருக்கிறார். எதிர்கட்சித் தலைவர் கூறிய கருத்திற்கு கண் காது, மூக்கு, தொப்பி எல்லாம் வைத்து கேள்வி எழுப்புகிறீர்கள் என்றார்.
 
பாஜக கட்சிக் குறித்து தற்போதைய தலைவர்களிடம் கேளுங்கள் நான் ஆளுநராக இருக்கிறேன்  என்னை இதில் இழுத்துவிடாதீர்கள். 12 மணி நேர தொழிலாளர் திருத்தச் சட்டத்தை தொழிலாளர்களிடம் விட்டுவிடுங்கள் அதனை அரசியலாக்க வேண்டாம்.
 
நான் மருத்துவராக ஓர் கருத்து இதில் கூறுகிறேன். 4 நாட்கள் பணி 3 நாட்கள் விடுமுறை இருந்தால் தொழில் உற்பத்தி அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கோடை வெயில் அதிகரித்து இருப்பதால் நீர் சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள் எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments