திருமணத்தின்போது, மணமகள் வீட்டாரிடம் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்பது, அது கொடுக்கவில்லை என்றால் திருமணத்தை நிறுத்ததுவதும், திருமணம் முடிந்த பின் மீண்டும் வரதட்சணை கேட்டுக் கொடுமை படுத்துவதும் அதிகரித்து வரும் நிலையில் வரதட்சணையே வேண்டாம் எனக் கூறி மணமகள் வீட்டார் கொடுத்த வதட்சணையை திருப்பிக் கொடுத்துள்ளார் ஒரு இளைஞர்.
சமீபத்தில் கேரள மாநிலத்தில் வரதட்ணைக்காக ஒரு பெண் கொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமாத்துறையினர் இதுகுறித்த விழிப்புணர்வைக் கையில் எடுத்தனர்.
இந்நிலையில் இன்று கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணமகள் வீட்டார் கொடுத்த வரதட்சணை வேண்டாம் எனக் கூறி கட்டிய புடவையுடன் மட்டும் உங்கள் மகளை அனுப்பி வையுங்கள் என மணமகள் கூறியுள்ளார். இவரது செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.