காவிரி நீர் பிரச்னையால், கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன, மேலும் தமிழர்களின் உடைமைகளும் அடுத்து நெருக்கப்பட்டன.
இந்நிலையில், இதனால், கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கர்நாடகத்துக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் என்எல்சி தலைமையகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, சிலர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
முன்னதாக, காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக, தமிழகதில், கன்னட ஓட்டுனர் ஒருவரை நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக தாக்கியனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.