Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒருதலைக்காதல் விபரீதம் :மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்ற நபர் !

Advertiesment
ஒருதலைக்காதல் விபரீதம் :மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்ற நபர் !
, சனி, 27 ஏப்ரல் 2019 (12:58 IST)
கேரள மாநிலம்  வயநாடு மாவட்டத்தில் சுல்தான்பத்தேரி அருகே உள்ள நாய்கட்டி பகுதியில் வசித்து வந்தவர் நாசர். இவரது மனைவி அமினா(37). இவர்களுக்கு 3 பெண்குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் நாசர் கணினி மையம் வைத்துள்ளார். 
அப்பகுதியைச் சேர்ந்த பென்னி (47)என்பவர் அங்கு பர்னிச்சர் கடையை நடத்தி வந்தார்.
இந்நிலையில் நாசர் நேற்று மதியம் 1 மணி அளவில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காகச் சென்று விட்டார். அப்போது அவரது வீட்டில் வெடிகுண்டு சப்தம் கேட்டுள்ளது. 
 
அருகில் உள்ளவர்கள் நாசரின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அமீனா மற்றும் பென்னி  ஆகிய இருவரும் உடல் சிதறி பலியாகிவிட்டனர்.
 
இதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர்.  தடவியல் , வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைசெய்யப்பட்டது.
 
பின்னர் இருவரது உடல் பாகங்கள் உடற்கூறு சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
 
இதனையடுத்து போலீஸார் விசாரணையில் தெரியவந்ததாவது :
 
அமினாவின் மீது ஒருதலையாகக் காதல் கொண்டிருக்கிறார் பென்னி.  இதனை அமினாவிடம் பலமுறை கூறியுள்ளார். ஆனால் இதற்கு அமீனா மறுத்துள்ளதாகத் தெரிகிறது.இதனால் அமீனாவில் கணவர் நாசர் வீட்டில் இல்லாத சமயத்தில் (நேற்று மதியம்  1 மணிக்கு ) அமீனாவை சந்திக்க நினைத்த  பென்னி வெடிகுண்டுடன் சென்றுள்ளார்.
 
அப்போதும் அமீனா அவரது ஏற்காததால் வெடிகுண்டை வெடிக்கச் செய்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமியிடம் சில்மிஷம்... கம்பி எண்ணும் சைக்கிள் கடை அங்கிள்