Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுமியிடம் சில்மிஷம்... கம்பி எண்ணும் சைக்கிள் கடை அங்கிள்

Advertiesment
சிறுமியிடம் சில்மிஷம்... கம்பி எண்ணும் சைக்கிள் கடை அங்கிள்
, சனி, 27 ஏப்ரல் 2019 (12:55 IST)
திருச்சியில் தந்தை போல பழகி வந்த சைக்கிள் கடை அங்கிள் ஒருவர் 6 வது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறித்தியது சர்ச்சையாகியுள்ளது. 
 
திருச்சியில் பீமநகரை சேர்ந்த 6 வயது சிறுமி தனது வீட்டில் அருகில் இருக்கும் சைக்கிள் கடை அங்கிளிடம் பழகி வந்துள்ளார். அவருக்கும் மகள் இல்லை என்பதால், சிறுமியின் பெற்றோரும் தைரியமாக இருந்துள்ளனர். 
 
ஆனால், அந்த நபர் சிறுமிக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தருவதாக கூறிவிட்டு அழைத்து சென்று, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சிறுமி அழுத்துக்கொண்டே வீடு திரும்பியுள்ளார். 
 
மேலும் தனது பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவித்தும் உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் அந்த நபரிடம் இது குறித்து கேட்ட போது நடந்தவற்றை வெளியே கூறினால் சிறுமியை கொன்று ஆற்றில் வீசிவிடுவேன் என மிரட்டியுள்ளார். 
 
இதனால், அந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து உடனடியாக போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி அந்த நபரை கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதின் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் - தினகரன் ஆதரவாளர் அதிரடி