Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வராக பட்னாவிஸ், துணை முதல்வராக ஷிண்டே பதவியேற்பு.. முடிவுக்கு வந்த இழுபறி.!

Siva
வியாழன், 5 டிசம்பர் 2024 (18:16 IST)
மகாராஷ்டிரா மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் துணை முதல்வராக ஷிண்டே ஆகியோர் பதவியேற்றதை அடுத்து, கடந்த சில நாட்களாக இருந்து வந்த இழுபறி முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும், இதனைத் தொடர்ந்து அவர்கள் ஆட்சியை தக்கவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அந்தக் கட்சிக்கே முதல்-மந்திரி வேட்பாளர் என்று கூறப்பட்டது. ஆனால் ஷிண்டே அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தாலும், பின்னர் துணை முதலமைச்சர் பதவிக்கு ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து, மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், சற்றுமுன் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களுக்கு முதல்வர் பதவிக்கான பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல் ஷிண்டே துணை முதல்வர் பொறுப்பை ஏற்று கொண்டார்.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலைஞர் கைவினை திட்டம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!

சென்னையில் பைக் டாக்ஸி ஓட்ட தடையா? போக்குவரத்து துறை அறிவிப்பால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை: சட்டத்தை நீக்க டிரம்ப் முடிவு..!

வேகமாக வரும் கார்களை ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் பரிதாப பலி..!

ரஜினியின் 74வது பிறந்தநாள்.. 300 கிலோ கருங்கல்லில் சிலை செய்து வழிபட்ட ரசிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments