இன்னும் ஆறு மாத காலத்துக்கு முதலமைச்சர் ஆக தொடர அனுமதிக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அமைச்சர் அமித்ஷா அதற்கு வளைந்து கொடுக்கவில்லை என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போது முதல்வராக இருக்கும் இயக்குனர் ஏக்நாத் ஷிண்டே மேலும் 6 மாத காலம் முதலமைச்சராக தொடர அனுமதிக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அந்த கோரிக்கையை அமித்ஷா நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
பாஜக கிட்டத்தட்ட இறுதி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது நிலையில், முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்றும், உங்கள் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் எங்களுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பீர்களா என அமித்ஷா பதில் கூறியதாகவும் தெரிகிறது.
அடுத்த கட்டமாக இன்னும் ஒரு ஆறு மாதத்திற்கு முதலமைச்சர் பதவியை எனக்கு கொடுங்கள் என்று கேட்டதற்கு அது நிர்வாக ரீதியாக சரியாக வராது என்றும், மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று அமித்ஷா கூறியதாக தெரிகிறது.
இதனை அடுத்து, துணை முதல்வர் பதவி மற்றும் தனது கட்சியினருக்கு முக்கிய அமைச்சர் பதவி வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுத்ததாகவும், அந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.