Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகம் பரவும் டெல்ட பிளஸ்... 3வது அலைக்கு காரணமாகுமா?

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (12:01 IST)
இந்தியாவில் மராட்டியம், கர்நாடகா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. 

 
கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் உருமாறிக்கொண்டே புதிய வகையாக மாறிக் கொண்டு வருவதால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்தியாவில் ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில் அந்த வைரஸுக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் திடீரென ஒரு சில நாடுகளில் டெல்டா பிளஸ் வகை என கொரோனா உருமாறியதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த வகை இந்தியாவில் இல்லை என்று நம்பப்பட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென கேரளாவில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இதனைத்தொடர்ந்து இந்தியாவில் மராட்டியம், கர்நாடகா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. மராட்டியத்தில் மும்பை - 2 பேருக்கும், ரத்தினகிரி - 9 பேருக்கும், ஜல்காண் - 7 பேருக்கும் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments