டெல்லியில், கணவனுடனான பாலியல் உறவில் திருப்தியின்மை காரணமாக, மனைவியே தனது கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் நிஹால் விஹார் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பர்சானா கான் என்ற பெண், தனது கணவர் முகமது ஷாஹித் என்பவர் தன்னை பாலியல் உறவில் திருப்தி செய்யவில்லை என்பதால், அவருக்கு தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்துக் கொலை செய்ததாக தெரிகிறது.
கொலையை செய்த பின்னர் பர்சானா கான் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் காப்பாற்றப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தனக்கும் தனது கணவருக்கும் இடையே பாலியல் ரீதியான உறவில் திருப்தி இல்லை என்ற காரணத்திற்காகவே இந்த கொலையைச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.