டெல்லி வன்முறை; 35 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை

Arun Prasath
வியாழன், 27 பிப்ரவரி 2020 (12:48 IST)
டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதாரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் நிலவியதில் வன்முறை வெடித்தது. இதில் வீடுகள், வாகனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.

3 நாட்களாக தொடர்ந்த இந்த கலவரத்தில் 215 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று காலை வரை பலி எண்ணிக்கை 30 ஆக இருந்தது. தற்போது சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 5 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அப்பகுதியில் அமைதி நிலவினாலும் மக்கள் பதற்றத்துடன் இருப்பதாக தெரியவருகிறது. மேலும் அப்பகுதியில் கலவரம் தொடராமல் இருக்க, துணை நிலை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா திருமணம் திடீர் ஒத்திவைப்பு: சஸ்பென்ஸ் தரும் 'கண் திருஷ்டி' எமோஜி!

இஸ்லாமியர் வீட்டை இடித்த அரசு.. அவருக்கு வீடு கட்டி தருவேன் என இடம் கொடுத்த பக்கத்து வீட்டு இந்து மத நபர்..!

'டிட்வா' புயல் பாதிப்பு: கொழும்பு விமான நிலையத்தில் 300 இந்தியர்கள் உணவின்றி தவிப்பு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: பவுன் ரூ.95,000-ஐ தாண்டியது!

வட தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல்: 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments