Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

Siva
புதன், 11 ஜூன் 2025 (10:39 IST)
டெல்லியில் ஒன்பது வயதுச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், 28 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை, துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சனிக்கிழமை, 9 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, அவரது உடல் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால், சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சிறுமியின் உடல் சூட்கேஸில் கண்டுபிடிக்கப்பட்டதும், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி, இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் சிறுமியை கொலை செய்த குற்றவாளி, உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூர் அருகே பிடிபட்டார். அவர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டபோது, வெல்கம் பகுதியில் உள்ள ஜீல் பூங்கா அருகே சிறுநீர் கழிக்க வேண்டும் என்று போலீஸ் குழுவிடம் கேட்டுள்ளார். 
 
வாகனத்திலிருந்து இறங்கியதும், குற்றவாளி திடீரென ஒரு கத்தியை எடுத்து, போலீஸ்காரர் அமித் மானின் நெஞ்சில் இரண்டு முறை குத்திவிட்டு தப்ப முயன்றார். எச்சரிக்கைக்காகச் சுட்டபோதும் அவர் ஓடியதால், அவரது காலில் சுட்டுப் பிடிக்கப்பட்டார்," என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
சிசிடிவி கேமராப் பதிவுகள் மற்றும் தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் குற்றவாளி பிடிபட்டதாகப் போலீசார் கூறினர். காயமடைந்த போலீஸ்காரரும், குற்றவாளியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீஸ்காரரைத் தாக்கியது தொடர்பாகத் தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்