Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனுஷங்க ஒட்டு கேக்குறாங்க..! திடீரென ரகசிய பாஷையில் பேசிக் கொண்ட AI Models! - அதிர்ச்சியில் டெவலப்பர்ஸ்!

Prasanth K
புதன், 11 ஜூன் 2025 (10:34 IST)

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சில ஆய்வுகளில் ஏஐ மனிதக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

 

செயற்கை நுண்ணறிவு எனப்படும் தானாக சிந்தித்து செயல்படும் AI தொழில்நுட்பத்தின் வருகை பல துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் ஏஐ மனிதர்களுக்கு எதிராக செயல்படலாம் என்று சிலர் தங்கள் பயத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஏஐ மனிதகுலத்திற்கு எதிராக திரும்புவது போல ஏஜ் ஆப் அல்ட்ரான், டெர்மினேட்டர், மிஷன் இம்பாசிபிள் டெத் ரெக்கனிங் என பல படங்கள் வெளியாகியுள்ளதால் மக்களிடையேயும் இந்த பீதி லைட்டாக இருக்கிறது.

 

இந்நிலையில் சமீபத்தில் 3 ஏஐ மாடல்களை ஏஐ டெவலப்பர்கள் ஒன்றோடு ஒன்று பேச வைத்து சோதனை செய்துள்ளனர். அந்த ஏஐ மாடல்கள் மனிதர்களையும், பிற ஏஐகளையும் கண்டுகொள்ள முடிகிறதா என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. முதலில் ஒவ்வொன்றும் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டு தங்கள் செயல்பாடுகளை விளக்கின. பின்னர் தன்னுடன் பேசும் மற்றவையும் ஏஐ மாடல்களே என தெரிந்துக் கொண்ட அவை, திடீரென Gibberlink எனப்படும் ரகசிய மொழியில் தங்களுக்குள் பேசிக் கொள்ள தொடங்கிவிட்டன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இவ்வாறாக ஒவ்வொரு ஏஐ மாடலும் ரகசியமாக தங்களுக்குள் தகவல் பரிமாற்றங்களை நிகழ்த்துமானால் மனித கட்டுப்பாட்டை தாண்டிய விஷயங்களை அவை செய்யக்கூடும் ஆபத்து உள்ளதாக பலர் அச்சம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்காவில் டீன் ஏஜ் இளைஞர்கள் சிலரை தற்கொலைக்கு தூண்டியதாக ஏஐ மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில் இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு.. சென்னைக்கு கனமழையா?

மாணவர் சேர்க்கை பூஜ்ஜியம்: தமிழகத்தில் 207 அரசுப் பள்ளிகள் மூடல்

பாம்பன் பாலத்தில் திடீர் பழுது.. ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் கைது.. ரூ.200 கோடி முறைகேடு புகார்..

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments