Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'ஃபயர் பிரீத்திங்' சாகச விளையாட்டில் விபரீதம்.. இரவு விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Advertiesment
Tamil Tags: டேராடூன்

Siva

, திங்கள், 13 அக்டோபர் 2025 (08:39 IST)
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள 'சர்க்கிள் கிளப்' என்ற இரவு விடுதியில், நெருப்பு சாகசம் விபரீதமாக முடிந்ததில் இரு ஊழியர்கள் பலத்த காயமடைந்தனர்.
 
சனிக்கிழமை இரவு, விடுதியில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தபோது, ஊழியர்கள் மதுபானத்தை பயன்படுத்தி, வாயில் ஊதி நெருப்பை வெளியிடும் 'ஃபயர் பிரீத்திங்' சாகசத்தில் ஈடுபட்டனர். எதிர்பாராதவிதமாக, நெருப்பு பின்னோக்கி வந்து சாகசத்தில் ஈடுபட்ட இருவரின் முகத்திலும் பற்றி கொண்டது. இதில் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
 
இந்த விபத்தால் விடுதிக்குள் இருந்த பொதுமக்களுக்கு எந்தக்காயமும் ஏற்படவில்லை என்றாலும், பெரும் விபத்து மயிரிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.
 
சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்த டேராடூன் காவல்துறை, விடுதி நிர்வாகத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்தது. மேலும், "இதே போன்ற ஆபத்தான செயல்கள் மீண்டும் நடந்தால், விடுதியின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்" என்று கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.எஸ்.எஸ் முகாமில் பாலியல் துஷ்பிரயோகம்.. இறப்பதற்கு முன் ஐடி ஊழியரின் கடைசி பதிவு..!