Publish Date: Tue, 11 May 2021 (17:11 IST)
Updated Date: Tue, 11 May 2021 (18:13 IST)
பீகார் மாநிலத்தில் உள்ள பக்சார் என்ற மாவட்டத்தில் ஓடும் கங்கை நதியில் திடீரென 50க்கும் மேற்பட்ட சடலங்கள் திடீரென மிதந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சடலங்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களுடையாத இருக்கலாம் என்றும், கொரோனா அச்சம் காரணமாக உறவினர்கள் கங்கை நதியில் பிணங்களை வீசி விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் பீகார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சடலங்களை, சவுசாவில் மஹாதியோ கரையில் ஜேசிபி எந்திரத்தினால் தோண்டப்பட்ட பெரிய குழியில் போட்டு எரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.