Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 16 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தியாச்சு!!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (17:35 IST)
நாடு முழுவதும் 3 மணி நிலவரப்படி 13 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

 
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சிறுவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். 
 
அதன்படி பிரதமர் மோடி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்திருந்தார். மேலும் கோவின் இணையதளத்தில் இதற்கான முன்பதிவுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இதுவரை 7 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக முன் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 15-18 வயதுக்குட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போட அனுமதி தரப்பட்டுள்ளது. எனவே அதை மட்டுமே செலுத்த வேண்டும் என மன்றிய அரசு தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் நாடு முழுவதும் 3 மணி நிலவரப்படி 13 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகஸ்ட் 1 முதல் பழைய பயண அட்டையை பயன்படுத்த முடியாது: சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

அதிமுகவை எதிர்க்காதது ஏன்? விஜய்யின் தவெக விளக்கம்..

ரயில் போகும்போதே இடிந்து விழுந்த பாலத்தின் சுவர்! இமாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சி!

2வது நாளாக ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் தொடர் மகிழ்ச்சி..!

ஆட்டோ டிரைவரை நடுரோட்டில் செருப்பால் அடித்த மநீம பெண் பிரபலம்! - என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments