Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆபத்தான இமய மலை

ஆபத்தான  இமய மலை
, செவ்வாய், 24 மே 2016 (03:23 IST)
உலகத்தின் மிகப்பெரிய மாபெரும் மலைத்தொடரான இமயமலையில் நிலநடுக்கம் ஏற்பட்டல் பூமி பிளவுப்படும் அளவிற்கு ஆபத்தானது.


 

 
உலகத்தில் மிகப்பெரிய மாபெரும் மலைத்தொடர் இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும். இதில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்றாகும்.
 
இந்திய-ஆசிய குவிதல் ஆண்டிற்கு 20 மிமீ தெற்கு இமாலய முகப்பின் அழுத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. இதனால் இமயமலை ஆண்டிற்கு 5 மிமீ உயர்கிறது. இந்தியத் தகடு ஆசியத் தகடுகளில் நுழைவதால் இப்பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது.
 
இமய மலைப் பகுதிகளில் உணர முடியாத நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இமய மலைப் பகுதிகள் கடினமான பாறைகளை கொண்டிருப்பதாலும், வளைந்து வளைந்து மலைகள் இருப்பதாலும், பல நேரங்களில் வெளி உலகம் அறியாத, அறிய முடியாத பல நில நடுக்கங்கள் நிகழ்வதுண்டு.

இந்த நிலநடுக்கங்கள் எந்த கருவியிலும் பதிவாவதில்லை. மேலும், இமய மலையின் பூமிக்குள் ஏற்படும் நிலநடுக்கங்களால் பூமி பிளவுபடுவதும் இல்லை. இதை ‘பிளைண்ட் த்ரஸ்ட்’ என்கின்றனர்.
 
உயர் தொழில்நுட்ப உத்திகள் கொண்ட ஆய்வில், 1255 மற்றும் 1934-ம் ஆண்டுகளில் இமாலயத்தில் இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் பூமியின் மேற்பகுதியில் பெரும் வெடிப்புகளை ஏற்படுத்தியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
 
அந்த நிலநடுக்கத்தால், பூமியில் சுமார் 150 கி.மீ. தூரம் பிளவு ஏற்பட்டது. பூமி பிளவுப்படும் வகையில் ஏற்படும் நிலநடுக்கத்தை ‘மெயின் பிரான்ட்டல் த்ரஸ்ட்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
 
மேலும் இது போன்ற நிலநடுக்கம் வரும் காலத்தில் நடக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எகிப்து பிரமிடு பற்றிய ரகசியம் (வீடியோ)