Publish Date: Wed, 20 May 2020 (15:10 IST)
Updated Date: Wed, 20 May 2020 (16:14 IST)
பீகாரில் கொரோனா முகாமிம் பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சியை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் 50 நாட்களுக்கும் மேலாக முடங்கியுள்ள நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கொரோனா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பீகாரின் சம்ஸ்திபூர் மாவட்டத்தில் காராகா கிராமத்தில் உள்ள கொரோனா முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் பொழுதுபோக்கிற்காக சில பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சி நடத்தி உள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.