தலித் என்பதால் மதிக்கவில்லை: யோகி ஆதித்யநாத் மீது புகார்!

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (21:25 IST)
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது எம்.பி ஒருவர் மோடியிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாருக்கான காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோட்டோ லால். இவர் தலித் சமூகத்த சேர்ந்தவர். இவர்தான் உத்தர பிரதேச முதல்வர் மீது புகார் அளித்துள்ளார். 
 
தான் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பாஜக கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தன்னை மதிக்கவில்லை என்றும், தன்னுடைய தொகுதியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளும், தனக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளும் தன்னை மதிப்பதில்லை என்று கூறியுள்ளார். 
 
மேலும், உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திர நான் பாண்டே, சுனில் பன்சால் ஆகியோர் தன்னை மோசமாக நடத்தினார்கள் என முதல்வரிடம் புகார் அளிக்க சென்ற போது அவரும் அசிங்கப்படுத்தி இருக்கிறார். 
 
முதல்வர் மோசமாக திட்டி சோட்டோ லாலை வெளியே அனுப்பி உள்ளார். இந்த சம்பவம் குறித்து சோட்டோ லால் பிரதமர் மோடியிடம் புகார் அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments