Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் காவிரி பாய்ந்தோடும்: சொல்வது யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (20:53 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று மாபெரும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
 
திமுக சார்பாக தமிழகமெங்கும் நடைபெற்ற கடையடைப்பு  100 சதவீதம் வெற்றி பெற்றதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் காவிரி பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக தமிழக ஆளுநரை இன்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்தார். 
 
இந்த சந்திப்பிற்கு பின்னர், தமிழகத்தில் உள்ள கட்சிகள் தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே தமிழகத்தில் போரட்டம் செய்கிறது. தமிழக மக்கள் நலனில் பாஜக கட்சி எப்போதும் அக்கறையுடன் இருக்கிறது. 
 
காவிரி போராட்டத்தில் நாங்கள் எப்போதும் மக்கள் பக்கம் நிற்கிறோம். தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் காவிரி பாய்ந்தோட போகிறது. அதற்காக பாஜக கட்சி பாடுபடும். தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments