Publish Date: Tue, 02 Jun 2020 (15:39 IST)
Updated Date: Tue, 02 Jun 2020 (15:40 IST)
அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு மண்டலம் நிசர்கா புயலாக வலுபெற்றுள்ளது.
அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாம். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால், நிசர்கா என்று அழைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு மண்டலம் நிசர்கா புயலாக வலுபெற்றுள்ளது. வடக்கு திசையில் 11 கிமீ வேகத்தில் நகரும் நிசர்கா, தீவிர புயலாகி நாளை பிற்பகலில் மகாராஷ்டிரா - குஜராத் இடையே கரையை கடக்கிறது. புயல் கடக்கும் போது 95 - 105 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்., கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Sugapriya Prakash
Publish Date: Tue, 02 Jun 2020 (15:39 IST)
Updated Date: Tue, 02 Jun 2020 (15:40 IST)