தென் கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல பாலச்சந்திரன் இதுகுறித்துக் கூறியுள்ளதாவது :
வரும் ஜூன் 1 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்காக சூழல் உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வர வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வரும் 31 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரை அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.