Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் இன்று ’க்யூட்-யுஜி’ தேர்வு.. டெல்லியில் மட்டும் ஒத்திவைப்பு..!

Siva
புதன், 15 மே 2024 (15:28 IST)
தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்றைய க்யூட்-யுஜி தேர்வு நடைபெற்று வரும் நிலையில் டெல்லியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு படிக்க க்யூட்-யுஜி  தேர்வு கட்டாயம் என்ற நிலையில் இன்று காலை நாடு முழுவதும் இந்த தேர்வு நடைபெற்றது. ஆனால் டெல்லியில் மட்டும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் இன்று நடைபெற இருந்த வேதியியல், உயிரியல், ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான தேர்வு மே 29ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும் மே 16 முதல் 18 வரை அனைத்து பாடப்பிரிவுகளுக்கான பிரிவுகளும் வழக்கம்போல் நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் யூஜி படிப்பு சேர க்யூட்-யுஜி தேர்வு நடைமுறை அமல்படுத்தப்பட்டது என்பதும் இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் க்யூட்-யுஜி தேர்வு இன்று நாடு முழுவதும் 380 நகரங்களிலும் வெளிநாடுகளில் 26 இடங்களிலும் நடைபெற்று வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

15 குழந்தையை பஸ் ஸ்டாண்டில் விட்ட பெண்.. காதலனுடன் பைக்கில் எஸ்கேப்..!

22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments