ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின் இறுதிகட்டத்தை எட்டியுள்ளோம். இந்த வார இறுதியோடு லீக் போட்டிகள் முடிவடைகின்றன. இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டும் அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன. இந்நிலையில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி நடக்கிறது. இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி.
இந்நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற லக்னோ அணிக் கேப்டன் கே எல் ராகுல் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ்
அபிஷேக் போரல், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(w/c), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்பாடின் நைப், ரசிக் தார் சலாம், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
கேஎல் ராகுல்(w/c), குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, யுத்வீர் சிங் சரக், அர்ஷத் கான், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான்