Publish Date: Thu, 15 Sep 2022 (13:39 IST)
Updated Date: Thu, 15 Sep 2022 (13:40 IST)
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகள் படிப்பதற்கான கியூட் நுழைவு தேர்வு சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பு படிக்க கியூட் தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான கியூட் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடந்த நிலையில் இந்த தேர்வை ஏராளமான மாணவர்கள் எழுதினர்
இந்த நிலையில் கியூட் தேர்வு முடிந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்று இரவு 10 மணிக்கு இந்த தேர்வு முடிவு வெளியிடப்படும் தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது
மேலும் கியூட் தேர்வு முடிவுகள் வெளியான பின் விடைத்தொகுப்பில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை தேசிய தேர்வுமுறைக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.