Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நன்கொடை கொடுக்காத குமாரசாமிக்கு சந்தேகம் ஏன்? சி.டி.ரவி கேள்வி!

நன்கொடை கொடுக்காத குமாரசாமிக்கு சந்தேகம் ஏன்? சி.டி.ரவி கேள்வி!
, வியாழன், 18 பிப்ரவரி 2021 (09:23 IST)
பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, குமாரசாமி அயோத்தி நன்கொடை விவகாரம் குறித்து பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார். 

 
நீண்ட ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்து வந்த அயோத்தி விவகாரம் முற்று பெற்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் கோலகலமாய் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கின. இந்நிலையில் கோயில் கட்டுவதற்காக பல தரப்பினர் நன்கொடை அளித்து வருகின்றனர்.  
 
இந்நிலையில், ராமர் கோயில் கடுமானப் பணிகளுக்கு நன்கொடை தராதவர்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மிரட்டுவதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்,  
 
ராமருக்கு கோயில் கட்டுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், நன்கொடை வழங்கியவர்களையும், வழங்காதவர்களையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பிரித்து வைத்து மிரட்டுவது ஜெர்மெனியில் நாஸிக்கள் செய்ததை போல இருப்பாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தானு,ம் மிரட்டலுக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, ராமர் கோவில் கட்ட ஏழை முதல் பணக்காரர் வரை அனைவரும் நன்கொடை கொடுத்துள்ளனர். நன்கொடை விஷயத்தில் அவர்களுக்கு இல்லாத சந்தேகம் நன்கொடை கொடுக்காத குமாரசாமிக்கு மட்டும் எழுவது ஏன்?
 
பணம் மட்டுமே எங்களின் குறிக்கோளாக இருந்தால் நாங்கள் வீடு வீடாக சென்று நன்கொடை பெற மாட்டோம். நாட்டின் பெரிய தொழில் அதிபர்களே ராமர் கோவில் கட்ட பணம் கொடுத்திருப்பார்கள். ராமர் கோவில் என்பது தேசிய கோவில். நாட்டில் தற்போது நெருக்கடி இல்லை. ஜனநாயக முறை அமலில் உள்ளது. நீங்கள் (குமாரசாமி) முதல்-மந்திரியாக இருந்தபோது, கடந்த 2019 ஆம் ஆண்டு தான் அந்த நெருக்கடி நிலை இருந்தது என பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் கட்சியுடன் கூட்டணி: விஜய் பட தயாரிப்பாளர் அறிவிப்பு!