மும்பையில் வாலிபர் ஒருவர் கிரிப்டோகரன்சி மோசடியில் கிட்டத்தட்ட ரூ.19 லட்சத்தை பறிகொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் 37 வயதான நபர் ஒருவர், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மர்ம நபர்கள் சிலர், தன்னுடைய வாட்ஸ்அப் எண் மற்றும் டெலிகிராம் ஐடி மூலம் தொடர்பு கொண்டு கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என மூளை சலவை செய்ததாகவும், அதை நம்பி டிசம்பர் 7 முதல் 11 வரை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.18,90,000 பணம் பரிமாற்றம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டு தர வேண்டுமென்று அந்த புகாரில் பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மும்பை போலீசார், மோசடி செய்தவர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.