உத்தரப் பிரதேச அரசு கட்டடங்களில் இனிமேல் பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்படும் இயற்கை பெயிண்ட் பூசப்பட வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, அரசு கட்டடங்களில் இயற்கை பெயிண்ட் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு நேரும் பாதிப்பு குறையும். அந்த வகை பெயிண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கமும் கிடைக்கும்.
மேலும், பசு பாதுகாப்பு மையங்களை சுயநினைவு கொண்ட அமைப்புகளாக மாற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறினார். பசு மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் தவறாமல் வழங்க வேண்டும், பசு தீவனம் மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
எளிய குடும்பங்களுக்கு பசு வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும், பரேலியில் கரிம உரம் மற்றும் பசு சிறுநீர் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்கும் பணி முன்னேற்றத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.