கோவிஷீல்டு தடுப்பு மருந்து ஒருவரின் வாழ்நாள் முழுவதும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
	
	
	 
	இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கொரோனா மருந்தை இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 
	 
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	இந்நிலையில், இந்த மருந்தின் செயல்பாடுகள் குறித்து இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் கோவிஷீல்டு கொரோனாவில் இருந்து ஆயுள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.