Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 3வது அலை தாக்க 8 மாதம் டைம்: வெளியான கணிப்பு!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (08:50 IST)
கொரோனா 3வது அலை இந்தியாவைத் தாக்க இன்னும் 8 மாதங்களாகும் என மத்திய அரசின் சிறப்பு குழு கணித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இதனால் கொரோனா இரண்டாம் அலை விரைவில் முடிவுக்கு வரும் நம்பப்படுகிறது. முன்னதாக கொரோனா 2வது அலை ஜூலை மாதம் முடிவுக்கு வரும் எனவும் இதன் பின்னர் அக்டோபர் மாதம் 3வது அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இதனைத்தொடர்ந்து டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று கொரோனா 3 ஆம் அலை உருவாக வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா 3வது அலை இந்தியாவைத் தாக்க இன்னும் 8 மாதங்களாகும் என மத்திய அரசின் சிறப்பு குழு கணித்துள்ளது. மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா 3 வது அலையால் பெரிய பாதிப்பு இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே கொரோனா 3வது அலை வந்தால் அது இரண்டாம் அலையை போல மிகவும் மோசமானதாக இருக்காது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி அறிவியலாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments