Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமாவில் இதை செய்ய விருப்பமுண்டு – பாடகர் சித் ஸ்ரீராம் பதில்!

சினிமாவில் இதை செய்ய விருப்பமுண்டு – பாடகர் சித் ஸ்ரீராம் பதில்!
, புதன், 30 டிசம்பர் 2020 (10:09 IST)
பாடகர் சித் ஸ்ரீராம் எதிர்காலத்தில் படங்களை இயக்க ஆர்வம் உண்டு எனக் கூறியுள்ளார்.

தமிழில் வளர்ந்து வரும் பாடகர்களில் சித் ஸ்ரீராம் முக்கியமான இடத்தில் உள்ளார். இளையராஜா, ரஹ்மான் முதல் இமான் யுவன் ஷங்கர் ராஜா வரை எல்லோரின் விருப்பப் பட்டியலிலும் அவர் இருக்கிறார். அவர் பாடிய எல்லா மெலடி பாடல்களும் கவனம் ஈர்த்துள்ளன. இந்நிலையில் டிவிட்டரில் அவர் ரசிகர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது சினிமாவில் பாடுவதைத் தவிர நடிப்பதற்கோ அல்லது இயக்கவோ ஆசை உண்டா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சித் ஸ்ரீராம் ‘எதிர்காலத்தில் திரைப்படங்களை இயக்க ஆசை உண்டு’ எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவர் வானம் கொட்டட்டும் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோயில் கோயிலாக சென்று யாகம் செய்தேன்… ஆனால் ஏமாற்றம்தான் – ரஜினி சகோதரர் கருத்து!