Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (20:20 IST)
காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய ஒற்றுமை பயணம் ஆகிய இரண்டு ட்விட்டர் கணக்குகளையும் தற்காலிகமாக முடக்க பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியிலிருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார் என்பதும் அதன் பின்னர் அவர் கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒற்றுமை பயணத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பெங்களூரில் ராகுல் காந்தி ஒற்றுமைப் பயணம் செய்தபோது கேஜிஎப் திரைப்படத்தின் இசையை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது 
 
இதையடுத்து கேஜிஎப் இசை உரிமையை பெற்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய ஒற்றுமை பயணம் ஆகிய இரு டுவிட்டர் கணக்குகளையும் தற்காலிகமாக முடக்க பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments