Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவி.. கணவருக்கு மாதம் ரூ.5000 தர மனைவிக்கு உத்தரவு..!

ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவி.. கணவருக்கு மாதம் ரூ.5000 தர மனைவிக்கு உத்தரவு..!

Mahendran

, வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (11:39 IST)
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும் இதனால் அவர் தனக்கு ஒவ்வொரு மாதமும் ஜீவனாம்சம் தரவேண்டும் என்றும் மனு அளித்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவருடைய கணவருக்கு மனைவி தான் மாதம் 5000 தரவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அமன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சில மாதங்கள் மட்டுமே அந்த பெண் கணவருடன் வாழ்ந்த நிலையில் கணவரை விட்டு பிரிந்து விட்டார்

இதனை அடுத்து மனைவி தனது கணவர் தனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை போது கணவர் அளித்த வாக்குமூலத்தில் ’தான் 12 ஆம் வகுப்பு இந்த போது அந்த பெண்ணை காதலித்ததாகவும் திருமணம் செய்ய அந்த பெண் தான் அவசரப்பட்டதாகவும்,  அதனால் தன்னுடைய படிப்பை நிறுத்திவிட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் இப்போது அவர் பிரிந்து விட்டதால் தனது படிப்பும் போய் வேலையும் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்

இந்த நிலையில் அமன் அவர்களின் படிப்பை கெடுத்து திருமணத்தை வலுக்கட்டாயமாக நடத்தியதற்காக அமன் அவர்களுக்குத்தான் அவருடைய மனைவி மாதம் 5000 தரவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வித்தியாசமான தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்.. அரசு வேலை! – முதலமைச்சர் அறிவிப்பு!