Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நூறு வயது தாண்டிய தம்பதியர் கொரோனோவிலிருந்து குணம் !

Advertiesment
நூறு வயது தாண்டிய தம்பதியர் கொரோனோவிலிருந்து குணம் !
, செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (21:29 IST)
மஹாராஷ்டிராவில் அதிக வயதுள்ள முதியவர்கள் இருவரும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில், சாதாரண மக்கள் முதல் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தொற்றின் தீவிரம் கருதி மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோவது அதிகரித்துவருகிறது. அதேசமயம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே மஹாராஷ்டிராவில் அதிக வயதுள்ள முதியவர்கள் இருவரும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் தண்டா கிராமத்தில் வசிக்கும் 105 வயது முதியவர் தேனுசவான் மற்றும் அவரது மனைவி 95 வயது மோட்டா பாய்யா இருவரும் கொரொனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஹன் உதவியுடன் சுவாசித்த நிலையில் இத்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இது கொரொனா நோயாளிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவரும், செவிலியரும் மாறிமாறி கன்னத்தில் அறைந்த சம்பவம்