கேரளாவில் இரு இளைஞர்களை கடத்தி, உடலெங்கும் ஸ்டேப்ளர் ஊசிகளை பயன்படுத்தி, மிளகாய் ஸ்ப்ரே அடித்து கொடூரமாக தாக்கிய கணவன்-மனைவி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் அருகே உள்ள சாரலகுன்னு பகுதியை சேர்ந்த ஜெயேஷ் மற்றும் அவரது மனைவி ரேஷ்மி ஆகியோர் முதலில் 19 வயது இளைஞர் ஒருவரை வீட்டிற்கு வரவழைத்தனர். அதன்பின்னர் ஜெயேஷ், தனது மனைவியுடன் சில பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு அவரை கட்டாயப்படுத்தியுள்ளார். அதை வீடியோ எடுத்ததோடு, இளைஞரை கட்டிப் போட்டு, இரும்பு கம்பியாலும், சைக்கிள் செயினாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அவரை கத்தியால் மிரட்டியதுடன், மிளகாய் ஸ்ப்ரேயும் அடித்துள்ளனர். அவரிடமிருந்த 19,000 ரூபாயை பறித்துக்கொண்டு, ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இரண்டாவதாக, ஜெயேஷின் முன்னாள் சக ஊழியர் ஒருவரை வீட்டிற்கு அழைத்துள்ளனர். அவரைப்பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதோடு, உடலின் 23 இடங்களில், பிறப்புறுப்பு உட்பட, ஸ்டேப்ளர் ஊசிகளை பயன்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், அவரிடமிருந்த பணத்தையும், செல்போனையும் பறித்துக்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, இந்த தாக்குதல்கள் குறித்துப் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஜெயேஷ் மற்றும் ரேஷ்மிதான் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்,