Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வானதிஇங்கே_வாக்குறுதிஎங்கே' ஹேஷ்டேக்கிற்கு பதிலடி கொடுத்த பாஜக..!

வானதிஇங்கே_வாக்குறுதிஎங்கே' ஹேஷ்டேக்கிற்கு பதிலடி கொடுத்த பாஜக..!
, ஞாயிறு, 16 ஜூலை 2023 (16:18 IST)
கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இன்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று போராட்டம் நடத்தினர். 
 
மேலும் வானதிஇங்கே_வாக்குறுதிஎங்கே'  என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பாஜக ஆதரவாளர்கள் அதிரடியாக களத்தில் இறங்கி வானதியும் இங்கே வளர்ச்சியும் இங்கே' என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
 
இதனால் சமூகவலை தளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி செய்த தொகுதி மேம்பாட்டு பணிகள் குறித்த விவரங்களையும் புகைப்படங்களாக டுவிட்டரில் வெளியிட்டு பாஜகவினர் வருகின்றனர் 
 
இதனால் மக்கள் நீதி மையம் கட்சியினருக்கும் பாஜக கட்சியினருக்கும் இடையே வாத, விவாதங்கள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக்காளி விற்று கோடீஸ்வரரான விவசாயி! மகாராஷ்டிராவில் ஆச்சர்யம்!