Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2000 ரூபாய் நோட்டின் விலை என்ன தெரியுமா ?

2000 ரூபாய் நோட்டின் விலை என்ன தெரியுமா ?
, புதன், 10 ஜூலை 2019 (09:09 IST)
பணமதிப்பிழப்புக்கு பிறகு அச்சடிக்கப்பட்டு வரும் 2000 நோட்டுகளைத் தயாரிக்க எவ்வளவு செலவு ஆகிறது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதை அடுத்து நடப்பில் இருந்த 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய வடிவிலான 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியாகின.

இந்நிலையில் அச்சடிக்கப்பட்டும் ஒரு 2000 ரூ நோட்டின் தயாரிப்புச் செலவு எவ்வளவு என்பது குறித்த விவரத்தை மத்திய நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார். அதில் 2000 ரூ நோட்டுகளை அச்சடிக்க 2017-18 நிதியாண்டில் ரூ.4.18 ஆக நிர்ணயிக்கப்பட  2018-19 நிதியாண்டில் இதன் விலை ரூ.3.53 ஆகக் குறைந்துள்ளது. அதேப்போல 200 ரூபாய் நோட்டு ஒன்றுக்கு ரூ.2.24 இருந்த விலை  2018-19ஆம் ஆண்டில் அது ரூ.2.15 ஆகக் குறைந்துள்ளது. இந்த நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தால் அச்சிடப்படுகின்றன.

மற்றொரு நிறுவனமான செக்யூரிட்டி பிரின்டிங் & மானிடரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் 500 ரூ நோட்டுகளை ரூ.3.37 க்கு அச்சடித்து வெளியிடுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை – வைகோ உறுதி !