Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிரட்டிய டிரம்ப், பணிந்த மோடி: அதிர்ச்சியின் உச்சத்தில் சசிதரூர்...!

மிரட்டிய டிரம்ப், பணிந்த மோடி: அதிர்ச்சியின் உச்சத்தில் சசிதரூர்...!
, செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (13:27 IST)
ஒரு அரசின் தலைமை மற்றொரு நாட்டின் அரசை இப்படி வெளிப்படையாக மிரட்டுவதை நான் கேள்விப்பட்டது இல்லை தெரிவித்துள்ளார் சசிதரூர்.
 
ஹைராக்ஸிக்ளோரொகுயின் என்ற மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 
 
உலகளவில் அதிகளவில் ஹைட்ராக்ஸிக்ளொரோகுயின் தயாரிக்கும் நாடாக இந்தியா இருப்பதால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்த மருந்தை அமெரிக்காவுக்கு தர வேண்டும் என கேட்டிருந்தார். 
 
ஆனால் இந்தியாவின் சூழலை கருத்தில் கொண்டு மலேரியா மருந்துகள் உள்ளிட்ட சிலவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து எச்சரித்துள்ள ட்ரம்ப் ”இந்தியா எங்களது நட்பு நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்தை அமெரிக்கா கேட்டும் அதற்கு இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியா மருந்து கொடுக்காதபட்சத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என கூறினார்.
webdunia
அவரது இந்த அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா மட்டுமல்லாமல் அவசர நிலையில் இருக்கும் மற்ற நாருகளுக்கும் மருந்துகளை அனுப்ப இந்தியா அனுமதி அளித்துள்ளது.
 
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், என்னுடைய அனுபவத்தில் ஒரு அரசின் தலைமை மற்றொரு நாட்டின் அரசை இப்படி வெளிப்படையாக மிரட்டுவதை நான் கேள்விப்பட்டது இல்லை என அதிர்ச்சியாக பதிவிட்டுள்ளார். 
 
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவிற்கு சொந்தமான மருந்தை நம்முடையது என்று எப்படி கூற முடிகிறது? இந்திய அரசு உங்களுக்கு அதை கொடுக்க முடிவு செய்தால் மட்டுமே அது உங்களுடையது என காட்டமாக கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை! – தமிழக அரசு அறிவிப்பு!